Home இலங்கை அரசியல் மாவை சேனாதிராஜாவின் புகழுடலை பொறுப்பேற்ற சிறீதரன்

மாவை சேனாதிராஜாவின் புகழுடலை பொறுப்பேற்ற சிறீதரன்

0

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் பொறுபேற்றுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாவை சேனாதிராஜா இன்று மரணித்திருந்தார்.

அரசியல் பிரமுகர்கள்

இந்நிலையில் அவரது மரணம் அறிந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன்படி மாவை சேனாதிராஜாவின் புகழுடலை குடும்பத்தாரின் அனுமதிக்கு அமைய நாடாளுமன்ற சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் அவரது புகழுடல் மாவிட்டபுறத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சி. சிறீதரன் எம். பி அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version