Home இலங்கை அரசியல் அநுர இந்தியாவுக்கு சிறீதரன் கனடாவுக்கு : திரைமறைவில் போடப்படும் திட்டம்

அநுர இந்தியாவுக்கு சிறீதரன் கனடாவுக்கு : திரைமறைவில் போடப்படும் திட்டம்

0

இலங்கை (Sri Lanka) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இந்திய புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான வரலாற்றில் மிக முக்கியமானதொரு தருணத்தில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய (India) விஜயம் இடம்பெறுகின்றது.

மூன்றுநாள் பயணமாக இந்தியா சென்ற அநுர அங்குள்ள முக்கிய தலைமைகளை சந்தித்துப் பேசியுள்ளார்.

மறுபக்கத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S.Shritharan) கனடா (Canada) சென்றுள்ளார்.

பொறுப்புக்கூறல், இந்து-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள் மற்றும் தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக அவர் அங்கு பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின் போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் (Shanmugam Kugathasan) பங்கேற்கவுள்ளார்.

இவ்வாறு குறித்த அரசியல் பயணத்தின் பிண்னணி தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/R2XFPO7bs2w

NO COMMENTS

Exit mobile version