Home இலங்கை அரசியல் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவார்கள்: கேள்வி எழுப்பியுள்ள ஶ்ரீகாந்தா !

அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவார்கள்: கேள்வி எழுப்பியுள்ள ஶ்ரீகாந்தா !

0

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்காத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை (Anura Kumara Dissanayaka) தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணிமான ஶ்ரீகாந்தா (N. Srikantha ) கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களால் மறக்க முடியாத ஜே.வி.பி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி வேட்பாளர் அநுர களம் இறங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த ஶ்ரீகாந்தா, “வடக்கு கிழக்கு தமிழ் மக்களை சட்டரீதியாக பிரித்தவர்கள் மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என கேட்கும் போது தமிழ் மக்களால் என்ன நம்பிக்கையில் வாக்களிக்க முடியும்?

சரத் பொன்சேகா

ஊழலை ஒழிக்கப் போகிறோம். நாட்டை சூறையாடியவர்களுக்கு தண்டனை வழங்கப் போகிறோம் என அநுர கூறுவது நல்ல விடயம் அதை மட்டும் வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கக் கூடாது.

உங்களைப் போன்ற பல இடதுசாரி தலைவர்களை நான் கண்டிருக்கிறேன் அவர்களுடன் நீண்ட உறவினை கொண்டிருந்தவன் என்ற ரீதியில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வினை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

அநுரவிடம் நான் ஒன்றை கூறுகிறேன். இன்னும் நாட்கள் இருக்கின்றன. நாளையோ நாளை மறு தினமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குங்கள் உங்களுக்கான ஆதரவு தொடர்பில் நாங்கள் சிந்திப்போம்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமை பாரிய தவறு என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

தமிழ் மக்கள்

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் தேன் போன்ற வார்த்தைகளை கூறி வாக்குகளை கேட்கும் தென்னிலங்கை வேட்பாளர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

அதன் காரணமாக நீண்ட காலமாக தென்னிலங்கை வேட்பாளர்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

எமது பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளை தாங்கி தென்
இலங்கைக்கு சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை கூறவே களம் இறக்கி உள்ளார்.

ஆகவே, தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வினை முன் வைக்காத எந்த ஒரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/srikantha-doubts-anura-s-tamil-support-1725791016

NO COMMENTS

Exit mobile version