Home இலங்கை அரசியல் பதவி விலகும் சிறீதரனுக்கு தேசியப்பட்டியல் : சிறீ இடத்துக்கு சுமோ

பதவி விலகும் சிறீதரனுக்கு தேசியப்பட்டியல் : சிறீ இடத்துக்கு சுமோ

0

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிற்கு (M.A Sumanthiran) தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இந்தநிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் நேற்றையதினம் (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

ஒருவேளை, இதுவும் ஒரு அரசியல் சுத்துமாத்து வேளையாக இருக்குமா என எண்ணத்தோன்றும் அதேவேளை சுமந்திரனை சுற்றியுள்ள சிலர் அவர் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டுமென தீவிரமாக செயற்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு தேசியப்பட்டியல் மூலமாக சுமந்திரன் நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும், தேர்தலில் போட்டியிட்ட சிறீதரன் தனது பதவியை துறந்து நாடாளுமன்றம் சென்றால் அதற்கு அடுத்தப்படியாக சிறீதரனின் பதவிக்கு விருப்பு வாக்கின் அடிப்படையில் சுமந்திரன் மாற்றப்படுவார்.

சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான முன்னைய முறுகல்களை தீர்த்துக்கொள்ள இவ்வாறான யுக்தி நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் மாற்று சிந்தனை, பின்னடைவை சந்தித்த தமிழ் மக்கள், மூத்த தமிழ் அரசியல்வாதிகளின் தோல்வி மற்றும் சுமந்திரனின் அடுத்தகட்ட நடவடிக்கை என பலதரப்பட்ட விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு,

https://www.youtube.com/embed/0Zpl03Pouqc

NO COMMENTS

Exit mobile version