Home இலங்கை அரசியல் சூடுப்பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு!

சூடுப்பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு!

0

நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்து வரிசை யுகம் ஏற்பட்ட நிலையில ரணில் விக்ரமசிங்க (Ranil wickremeinghe) ஆட்சியை பொறுப்பெடுத்துக்கொண்டார்.

எனினும் அன்று மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக போராடினார்களா அல்லது கட்டமைப்பு ரீதியான மாற்றத்திற்கு போராடினார்களா என்ற கேள்வி விவாதப்பொருளாகவே உள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் கிடைக்கபடாமல் இருக்கும் நிலையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்கு யாருக்கு என்ற கேள்வி எழும்பியுள்ளது.

இப்போதுள்ள பொருளாதார சூழலே வேண்டுமானால் தனக்கு வாக்களிக்குமாறு ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.

மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் என்று வருகின்ற போது சஜித்துடைய (Sajith Premadasa) தேர்தல் பிரச்சாரங்கள் மீது மக்களின் கவனம் செல்கின்றது.

லஞ்சம் ஊழல் அதிகார துஸ்பிரயோகத்திற்கு எதிரான ஒரு வலுவான கட்டமைப்பாகவும், வலுவாக செயற்படுவார் என நம்பப்படுபவர் அனுர குமார திசாநாயக்க எனவே அவர் மீதும் கவனம் செலுத்தப்படுகின்றது.

உரிமை சார்ந்த வாக்களிப்பாக பார்க்க போகின்றார்கள் என்றால் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்.

அந்தவகையில் தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை அலசி ஆராய்கின்றது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி..

https://www.youtube.com/embed/tItbke_lDXw

NO COMMENTS

Exit mobile version