Home இலங்கை சமூகம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது

இலங்கைக்கு பொருளாதார ரீதியாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது

0

 இலங்கைக்கு பொருளாதார ரீதியாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பலவீனமடைந்து செல்வதாகவும் இதனால் இலங்கைக்கு அது ஒர் சிறந்த பொருளாதார சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களத் தொலைக்காட்சியுடனான நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிகாரத்துவம் மலினப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் உலக அளவில் புதிய பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்புக்களை கொண்டு இலங்கை பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் போர் இடம்பெற்று வருவதாகவும், மத்திய கிழக்கு வரையில் அது வியாபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்தில் இலங்கை வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version