Home இலங்கை சமூகம் யாழில் மற்றுமொரு துயரம் : திடீரென மயங்கிச் சரிந்த பெண் பரிதாப மரணம்

யாழில் மற்றுமொரு துயரம் : திடீரென மயங்கிச் சரிந்த பெண் பரிதாப மரணம்

0

 யாழ்ப்பாணம்(jaffna) – காரைநகர் பகுதியில் இன்றையதினம் திடீரென மயங்கி விழுந்த
குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார்.
இதன்போது காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்கு தயாராகியவேளை திடீரென
மயக்கமுற்றுள்ளார்.

யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதி

இந்நிலையில் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.

 இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version