Home இலங்கை அரசியல் புதிய அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்: ஜோசப் ஸ்டாலின்

புதிய அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்: ஜோசப் ஸ்டாலின்

0

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் ஆரம்பம் நன்றாக உள்ளதுடன், அவை தவறினால் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எமது லங்காசிறியின் விசேட நேர்காணலில் கலந்துகொண்டு புதிய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது இந்த புதிய அரசாங்கம் மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஆகும். எனவே புதிய அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் அரசாங்கமாகவே காணப்பட்டது. ராஜபக்சர்கள் தங்களை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் அடக்குமுறையை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

எனவே புதிய அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version