பொதுவேட்பாளருக்கான தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிற்குள் அரசியல் கட்சிகளை வைத்திருக்கவேண்டாம் என சிவில் தரப்பிற்கு கடற்தொழிலாளர் சங்கங்கள் அழுத்தம் கொடுக்கின்றன.
இந்நிலையில், கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் நேற்றையதினம்(15) ஒரு ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
ஆரம்பத்திலே அரசியல் கட்சிகளை இதற்குள் கொண்டுவரவேண்டாம் என குறிப்பிட்டோம். ஒற்றுமை, கட்சிகளை அப்படி விடமுடியாது என்று சிவில் தரப்புக்கள் கூறின.
தற்போது சிவில் தரப்புக்களை அரசியல் கட்சிகள் எங்கு விட்டு சென்றுள்ளனர் என்பது தெரிகின்றதா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளாக நாங்களே ஒருவரை நியமிப்போம். இனி கட்சிகளை நம்பி பயனில்லை எனவும் தெரிவித்தனர்.
சிவில் தரப்புக்களும் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பார்கள் எனில் அவர்களுக்கும் தமிழர் விடயம் சார்ந்து பேச அருகதை இல்லாது செல்லும் என மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய்கின்றது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி….
https://www.youtube.com/embed/–U5CWoM_vc