Home இலங்கை அரசியல் நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடி: அநுர அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடி: அநுர அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

0

நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.

அரிசி மாபியா

தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருகின்றது.

நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது.

ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளதால்ன அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.

நாங்கள் கடினமான நிலையில் இருக்கின்றோம், என்றாலும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் தேவைப்படும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version