Home இலங்கை பொருளாதாரம் ஜூன் மாதத்தில் அதிகரித்த இலங்கையின் ஆடை ஏற்றுமதி வீதம்

ஜூன் மாதத்தில் அதிகரித்த இலங்கையின் ஆடை ஏற்றுமதி வீதம்

0

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆடை ஏற்றுமதி 5.2 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகக் கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சிய சந்தைகளில் ஏற்பட்ட வலுவான இலாபம் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி

இதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (European Union) இலங்கையின் ஏற்றுமதி 23.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேநேரம், பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 20.4 சதவீதம் அதிகரித்துள்ளதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த ஆடை ஏற்றுமதி 8.95 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version