Home இலங்கை அரசியல் பொலிஸ் தரப்பிடம் சிறிநேசன் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை

பொலிஸ் தரப்பிடம் சிறிநேசன் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை

0

மட்டகளப்பு மாவட்டத்தில் இடம்பெரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் பொலிஸ் தரப்பு கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலும் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை செயற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் முதலாவது
அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத்,  எம்.எஸ்.நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிளீன் ஸ்ரீ லங்கா

இதன்போது, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்
முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில்
முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. 

இங்கு கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அதன்
ஊடாக பிரதேச செயலகப்பிரிவில் சட்டவிரோத மதுவிற்பனை, சட்ட விரோத போதைப்பொருள்
பாவனையை தடுத்தல்,ஊழல்களை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள்
குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version