Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தி கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு செய்த துரோகம்..!

தேசிய மக்கள் சக்தி கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு செய்த துரோகம்..!

0

மக்களுக்கு புதிய விடயங்கள் மேல் எப்பொழுதும் விருப்பம் இருப்பதால் புதிய கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு (ஜேவிபி) மக்கள் வாக்களித்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின்(ITAK) காரைதீவு கிளை தலைமையிலான பிரதேச சபை வேட்பாளர்
அறிமுக நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் ஒரு தமிழரை கூட அவர்கள் முக்கியமான விடயங்களில் நியமிக்கவில்லை.

கிழக்கு பல்கலைகழக பேரவைக்கு உறுப்பினர்களில் நியமனம் செய்வதில் 9ஆக இருந்த தமிழர்களின் பிரதிநிதித்துவம் 5 ஆக குறைந்து விட்டது, 2 ஆக இருந்த சிங்களவர்களின் பிரதிநிதித்துவம் 7ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனை கேட்டபோது தேசிய மட்டத்தில் சிந்திக்கின்ற படியால் இவ்வாறு செய்ததாக அநுர தரப்பு பதிலளித்துள்ளது.

அப்படி பார்த்தால் தென்னிலங்கை பல்கலைகழகங்களில் ஒரு தமிழர் கூட நியமிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version