Home இலங்கை அரசியல் ஈழத்தமிழர்களின் இறைமைக்கு சமஷ்டியே தேவை: சிறீதரன் சுட்டிக்காட்டு

ஈழத்தமிழர்களின் இறைமைக்கு சமஷ்டியே தேவை: சிறீதரன் சுட்டிக்காட்டு

0

ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Sritharan) வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினருக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (18.01.2025) கொழும்பில் நடைபெற்றுள்ளது.

அதிகாரப் பகிர்வு

இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துப் பகிர்வுகளும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

அத்துடன், உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பது தான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து ஒஸ்லோவில் இணங்கிக் கொண்ட இறுதி விடயம் என்ற அடிப்படையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் சிறீதரன் எடுத்துரைத்துள்ளார். 

அதுமாத்திரமன்றி, 13ஆவது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள் தொடர்பிலும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version