Home இலங்கை அரசியல் நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை..! சிறீதரன் வெளியிட்டுள்ள கருத்து

நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை..! சிறீதரன் வெளியிட்டுள்ள கருத்து

0

Courtesy: Subramaniyam Thevanthan

நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை. தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி சபை
தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் கட்சியின்
செயற்பாட்டாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை
குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவிக்கையில், “எங்கள் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள
வெறுப்பு காரணமாக இவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு
மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர்.

அநுர அரசின் நடவடிக்கைகள் 

அந்த பரிசோதனையை மக்கள் இந்த
உள்ளூராட்சியிலும் செய்வதற்கு நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை. ஒருவாக்கு கூட
தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் போடக்கூடாது. 

புதிய அரசாங்கம் சில வேளைகளில் சபைகளை கைப்பற்றினால் சபைகளின் கீழுள்ள
சந்தைகளின் கடைகளைக் கூட தேசிய ரீதியில் கேள்வி கோரலை மேற்கொள்ளுவார்கள்.

உள்ளூராட்சி சபைகள் என்பது எமது அடிமட்ட அரசியலை கொள்கை ரீதியான அரசியல்
பயணமாக மேற்கொள்வதே. ஆனையிறவு உப்பை ஆனையிறவின் பெயரை மாற்றி இன்று ரஜ லுணு என
மாற்றியுள்ளனர்.

பிரித்தானிய தடை 

சபைகள் எமது கைகளில் இருக்கும் போது இந்த விடயங்கள் எல்லாம்
நடைபெறாது. கட்சியில் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. எனக்கு எதிராக கூட ஒரு இன விடுதலை
சார்ந்து பயணிக்கும் நாம் பதவிகளுக்கு ஆசைப்படக்கூடாது.

 தயாசிறி ஜெயசேகர சொல்கிறார், வடபகுதி மக்கள் தமிழ்த்தேசியத்தை
கைவிட்டுள்ளனர். ஏன் பிரித்தானியா நான்கு பேர் மீதும் தடை கொண்டு
வருகின்றனர் என்று.. 

 நாங்கள் விட்ட மிகப்பெரிய தவறு பொது வேட்பாளருக்கு ஒட்டு மொத்த மக்களும்
ஆதரவளித்து ஐந்து இலட்சத்திற்கும் மேலான வாக்குகளை அளித்திருந்தால்
பிரித்தானியா போன்ற நாடுகள் தமிழர்கள் தனித்துவமாக உள்ளார்கள் என்பதை
உணர்ந்திருப்பார்கள் நான்கு பேரை தடை செய்ததை விட பெரிய வெற்றி நாம் அந்த தவறை
விட்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version