யாழ்ப்பாணம் (Jaffna) தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்துவதில் இரு வர்த்தகர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரு வர்த்தகர் விளையாட்டு மைதான நுழைவாயிலை பூட்டு போட்டு பூட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நெல்லியடி கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானமே இவ்வாறு இன்று (9) பூட்டப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) மனைவி ஜலனி பிரேமதாச பங்கேற்கும் பிரசார கூட்டம் நாளை (10) காலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முரண்பாடு
குறித்த மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ((Ranil Wickremesinghe) தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று முன்தினம் (7) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
குறித்த மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவான பிரசார கூட்டத்தினை நடாத்த ஒருவர் மைதானத்தினை பார்வையிட வந்துள்ளார்.
அந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவர், எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவான நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவருடன் முரண்பட்டு கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானம் பெற்றவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.