Home சினிமா பிரதமர் மோடியின் அம்மாவாக நடிக்கும் நட்சத்திர நடிகை.. யார் தெரியுமா?

பிரதமர் மோடியின் அம்மாவாக நடிக்கும் நட்சத்திர நடிகை.. யார் தெரியுமா?

0

மா வந்தே

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ‘மா வந்தே’ தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பை அவருடைய 75வது பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

இதில் மலையான நடிகர் உன்னி முகுந்தன் மோடியாக நடிக்கிறார். வீர் ரெட்டி இப்படத்தை தயாரிக்க கிராந்திக்குமார் இயக்குகிறார்.

இந்த நிலையில், மா வந்தே படத்தில் நட்சத்திர நடிகை ஒருவர் மோடியின் தாயாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடியின் அம்மாவாக நடிக்கும் நடிகை

அவர் வேறு யாருமில்லை நடிகை ரவீனா டாண்டன் தான். பிரதமர் மோடிக்கு தனது தாயார் ஹீராபென் மீது மிகுந்த அன்பு உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அவருடைய கதாபாத்திரம் என்பது ‘மா வந்தே’ படத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.

அந்த ரோலில் ரவீனா டாண்டன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகையாக இருப்பவர் ரவீனா டாண்டன். இவர் கே.ஜி.எப் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version