Home முக்கியச் செய்திகள் இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங் இணையசேவை

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங் இணையசேவை

0

எலோன் மஸ்கின் (Elon Musk) செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் (Starlink) செயற்பாடுகளை இலங்கையில் அமைப்பதற்கான திட்டத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை குறித்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்கிற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) முன்னதாக அறிவித்திருந்தார்.

தொலைத்தொடர்பு

இந்நிலையில், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை நாட்டில் செயற்பட அனுமதிக்கும் வகையில், பல தசாப்தங்கள் பழமையான சட்டத்தில் திருத்தங்களை கடந்த செவ்வாயன்று (03.09.2024) நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

குறித்த திருத்தங்கள் மூன்று புதிய வகையான உரிமங்களை அறிமுகப்படுத்தியதுடன் ஸ்டார்லிங்க் இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் உரிமம் பெற்ற சேவை வழங்குநராக நுழைய அனுமதித்துள்ளது.

எனினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த நடவடிக்கை சாத்தியமற்றது என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ள நிலையில் ஜனதிபதி தேர்தல் முடியும் வரை இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்டார்லிங்க் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும், எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version