Home இலங்கை அரசியல் வவுனியாவில் தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் அநுரவை ஆதரித்து பிரசார நடவடிக்கை

வவுனியாவில் தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் அநுரவை ஆதரித்து பிரசார நடவடிக்கை

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும்
வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவை ஆதரித்து வவுனியா நகரில் தொழிற்சங்கங்களின்
பங்கேற்புடன் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, குடியிருப்பு பகுதியில் இன்று (07.09.2024) காலை ஆரம்பமாகிய பிரசார
நடவடிக்கை நகர வர்த்தக நிலையங்கள் மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும்
முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், மக்கள் விடுதலை
முண்ணினியினர், ஆதரவு தொழிற்சங்கங்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Source: https://tamilwin.com/article/campaign-support-anura-with-trade-unions-vavuniya-1725704764

NO COMMENTS

Exit mobile version