Home இலங்கை அரசியல் ஆரம்பமானது ஜனாதிபதி வேட்பாளர்களின் பொதுமேடை விவாதம்..!

ஆரம்பமானது ஜனாதிபதி வேட்பாளர்களின் பொதுமேடை விவாதம்..!

0

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொது மேடை விவாதம் தற்போது தொடங்கியுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று (07) பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை இந்த விவாதமானது நடைபெறுகின்றது. 

இதில், ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, நாமல் ராஜபக்ச மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

மக்களின் தெரிவு 

ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களின் எதிர்கால வேலைத்திட்டத்தை மக்களுக்கு முன்வைப்பதற்கும் பொருத்தமான வேட்பாளரை மக்கள் தெரிவு செய்வதை இலகுபடுத்துவதற்கும் இந்தாண்டு தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கு இடையில் விவாதம் நடத்த கடந்த மார்ச் 12 அன்று திட்டமிடப்பட்டிருந்தது. 

இதன்போது, வேட்பாளர்கள் விவாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் தங்கள் விருப்பப்படி மக்களுக்கு ஒரு செய்தியை வழங்கலாம் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான கேள்விகள் அவர்களிடம் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

Source: https://tamilwin.com/article/election-candidate-debate-tv-show-2024-1725706310

NO COMMENTS

Exit mobile version