Home இலங்கை அரசியல் சஜித்தை ஆதரித்த சுமந்திரனுக்கு ரணில் அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு

சஜித்தை ஆதரித்த சுமந்திரனுக்கு ரணில் அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு

0

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கு விசேட அபிவிருத்தி நிதியாக 10 கோடி ரூபாய் ஒடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட செயலக வட்டாரங்கள் மூலம் கூறப்படுகிறது.

தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன்வந்ததாக கடந்த 1ஆம் திகதி வவுனியாவில் வைத்து சுமந்திரன் அறிவித்திருந்தார்.

எனினும் அதனை இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இது என்று அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளிப்படையாக கூறவில்லை.

இந்த நிலை தொடரும் தருணத்தில் சஜித்தை ஆதரித்த ஒருவருக்கும் கிடைக்காத ஒரு சலுகை சுமந்திரனுக்கு கிடைத்துள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மறுத்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அபிவிருத்தி திட்டத்திற்கான நிதி தடைப்பட்டிருந்தது.

இந்த கருத்துக்கள் சஜித்துக்கு ஆதரவளித்த எம்பிக்கள் உரைகளில் வெளியானது.

ஆனால் சுமந்திரனுக்கு மாத்திரம், 10 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமந்திரனின் ஆதரவென்பது ரணிலின் திட்டமிடலா எனவும் கேள்வி எழுகிறது.

மாகாண சபைகள் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்காக தான் முன்வைத்த தனி நபர் பிரேரணையின் மூன்றாம் வாசிப்பு கடந்த 3ஆம் திகதி முன்வைக்கப்படவிருந்தது.

ஆனால், அன்றைய தினம் அது முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. இதற்கு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என்று எடுத்த தீர்மானமே காரணம் என கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி. குற்றஞ்சாட்டியிருந்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானங்களில் எம். ஏ. சுமந்திரன் தொடர்ந்தும் தனித்துவமான கொள்கையையே வெளிப்படுகிறது.

தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிப்பேன் என சூளுரைத்த நிலையிலேயே அவர் தனது நகர்வை தொடர்கின்றார்.

இந்த கட்சி ஒரு சிலரின் பிடிக்குள் சென்றுவிட்டது என குற்றங்களும் சுமத்தப்படுகிறது.

தமிழ் அரசுக் கட்சி பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றது.

இதனைத் தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா? அவ்வாறு ஆதரித்தால் சுமந்திரனுக்கு சஜித் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் பெற்று தருவாரா?

இங்கு புதிய அரசியல் யாப்புக்கான யோசனையை, உத்தேச முன்மொழிவை தாங்கள் முன்னெடுக்க போவதாக அநுர கூறியுள்ளார்.

அப்படி என்றால், அரசியல்ரீதியில் அநுரகுமார திசாநாயக்கவையே தமிழ் அரசுக் கட்சி ஆதரித்திருக்க வேண்டும்?

ஆனால் இங்கு அவர்கள் சஜித்தை ஆதரித்துள்ளமையாலும், சஜித் ஆதரவின் பின்னரும் தற்போது நிதி ஒடுக்கப்பட்டமையும் அரசியல் காய்நகர்தல்களின் ஒரு அங்கமா என கேள்வி எழுகிறது.

NO COMMENTS

Exit mobile version