Home இலங்கை அரசியல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேர்தல் சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேர்தல் சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு

0

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தேர்தல் சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் மற்றும் அவரது தந்தையும் முன்னாள் அமைச்சர்ருமான ஜனக பண்டார தென்னக்கோன் ஆகியோர் நேற்றைய தினம் மாலை வேளையில் தம்புள்ள நகரில் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்துகொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இந்த நடவடிக்கையை தடுத்துள்ளனர்.

இவ்வாறு பொலிஸார் குறித்த துண்டு பிரசுர விநியோகத்தை தடுக்க முற்பட்ட போது அங்கு பதற்ற நிலை உருவானதாக கூறப்படுகிறது.

 

பதற்ற நிலை

தம்புள்ள நகரத்தில் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக இவ்வாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

100க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு தம்புள்ள நகரில் துண்டு பிரசூர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும் இது தேர்தல் விதிமீறல் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

துண்டு பிரசுர விநியோகத்தை நிறுத்த தவறினால் கைது செய்ய நேரிடும் என பொலிஸார் அறிவித்ததனை தொடர்ந்து குழுமி இருந்தவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version