Home முக்கியச் செய்திகள் ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

0

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) இலக்கு வைத்து பல அவமானகரமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (ruwan wijewardene)(தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கொழும்பில் திங்கட்கிழமை (07) ஊடகங்களுக்கு விசேட கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வெறுப்புணர்வுடன் கீழ்த்தரமான அறிக்கைகள்

மேலும், ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மாளிகையை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதில்லை என்பதுடன், ஆடம்பர உணவு மற்றும் வெளிநாட்டு சமையல்காரர்களின் சேவைகள் தொடர்பாக தவறான மற்றும் முற்றிலும் அரசியல் வெறுப்புணர்வுடன் கீழ்த்தரமான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன என்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டுக்காக பல பணிகளை செய்துள்ளார். அத்துடன், கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை சாதகமான பக்கம் திருப்பினார். ஆனால் அவரை குறிவைத்து சில அவமானகரமான தவறான தகவல்களை பரப்பப்படுகின்றன.

பாதுகாப்பு நீக்கம்

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது அது முற்றிலும் பொய்யானது.

தற்போதைய அரசாங்கம் காலத்தை விரயம் செய்யாமல் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைய அவர்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம். 

NO COMMENTS

Exit mobile version