Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தெரிவு : தமிழ் இனம் எதிர்கொள்ளும் சவால்

ஜனாதிபதி தெரிவு : தமிழ் இனம் எதிர்கொள்ளும் சவால்

0

தமிழ் மக்களுக்கு எதிரான 75 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறை சுழற்சி மற்றும் இனவழிப்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anurakumara Dissanayake) வருகை முடிவு கட்டுமா என பிரித்தானிய தமிழர் பேரவை கேள்வியெழுப்பியுள்ளது.

குறித்த விடயத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கடந்த காலம் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிறிலங்காவில் அடுத்தடுத்து வரும் நெறிமுறை அற்ற அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் போராடும் போது கட்டமைப்பு ரீதியான தீவிரமான மாற்றங்களை கொண்டு வரும் வாக்குறுதியுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகை, சிறிலங்காவில் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியாகத் தெரிகிறது.

பிரித்தானிய தமிழர் பேரவை

தமிழ் மக்களுக்கு எதிரான 75 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறை சுழற்சி மற்றும் இனவழிப்புக்கு இந்த உற்சாகம் முடிவு கட்டுமா ?

இந்த அறிக்கை அநுரவின் அடித் தளமான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜேவிபி) மோசமான கடந்த காலத்தை வெளி கொண்டு வருகிறது.

இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யார், அவருடைய பின்னணி என்ன ?

அரசியல் வாழ்க்கை

அவர் கூறுவது போல் அவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல இலங்கை அரசியலில் மையக் கோட்டிற்கு இடது புறம் சாய்ந்த ஒரு சிங்கள தேசியவாதி.

அவரது அரசியல் வாழ்க்கை ஜனாதிபதியாக அவரின் கீழ் இன்னும் வரவிருக்கின்ற விஷயங்களுக்கு சிறந்த சான்றாக உள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இந்த அறிக்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) மற்றும் அநுரவின் உண்மையான முகத்தை ஆராய்ந்து தமிழ் மக்களின் முன் வைக்க விரும்புகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவாக பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கருத்துக்களை காண கீழுள்ள அறிக்கையை நாடுங்கள், 

NO COMMENTS

Exit mobile version