ஐக்கிய தேசியக் கட்சி (UNP) பொது ஜன முன்னணியுடனான( PA) உறவை துண்டித்துக்
கொள்கிறது என்ற கடிதத் தலைப்பின் கீழ் பரப்பப்படும் செய்தி போலியானது என்று
கட்சியின் அதிகார பூர்வ அறிக்கை இன்று(08) தெரிவித்துள்ளது.
இந்த போலிச் செய்தியால் ஏமாற வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி
பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
திட்டமிட்டபடி குழுவொன்று தனது கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை
அனுப்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
