Home முக்கியச் செய்திகள் சிறிலங்கா காவல்துறையில் புதிதாக இணையப்போகும் 9,000 பேர்

சிறிலங்கா காவல்துறையில் புதிதாக இணையப்போகும் 9,000 பேர்

0

சிறிலங்கா காவல்துறைக்கு புதிய காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது, பணியில் உள்ள காவல்துறையினரின் எண்ணிக்கை சுமார் 75,000 ஐ நெருங்கியுள்ளது.

அதிகாரிகளின் எண்ணிக்கை

இந்த அதிகாரிகள் போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, தற்போதைய காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, அந்தப் பணிகளைச் செய்யப் போதுமானதாக இல்லாததால், புதிய காவல்துறை அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்ததாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version