Home இலங்கை சமூகம் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

0

வடக்கின் புகழ்பெற்ற ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள ஶ்ரீ லங்கா போசிலேன் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள டில்சான் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஒட்டுசுட்டானில் உள்ள ஓட்டுத் தொழிற்சாலையின் செயற்பாடுகளை எதிர்வரும் 30 நாட்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்க துரித செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

உள்ளூர் தயாரிப்புகளின் தரம்

அம்பாறையின் ஈரியகம பிரதேசத்தில் உள்ள கூரை ஓட்டுத்தொழிற்சாலையை நவீனமயப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குளியலறை சாதனங்கள் உள்ளிட்ட போசிலேன் தயாரிப்புகளை விரிவுபடுத்தி, இறக்குமதி செய்யப்படும் போசிலேன் தயாரிப்புகளுடன் போட்டிபோடத் தக்கதாக உள்ளூர் தயாரிப்புகளின் தரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version