Home முக்கியச் செய்திகள் வட மாகாண ஆளுநரிடம் ஜோசப் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை!

வட மாகாண ஆளுநரிடம் ஜோசப் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை!

0

வடமாகாணத்தில் பரீட்சை உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்திற்கும் இடையில் நேற்று(27) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஆசிரியர் இடமாற்றங்கள்

அத்துடன், வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதை விட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version