Home இலங்கை அரசியல் சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – உதவி தேர்தல் ஆணையாளர்

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – உதவி தேர்தல் ஆணையாளர்

0

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்
பி. எம் சுபியான் தெரிவித்துள்ளார்.

இடம்பெற உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் திங்கட்கிழமை (05.05.2025)
இடம் பெற்றஊடக சந்திப்பிலேயே மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இவ்வாறு
கருத்து தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

 கடும் நடவடிக்கை

“நேற்று இரவு கழுவாஞ்சிகுடியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அரிசி
தொடர்பாக களுவாஞ்சி குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் சட்ட விதிகளை மதித்து நடக்க
வேண்டும். பொதுமக்கள் நேரகாலத்துடன் வாக்களித்து விட்டு தங்களது வீடுகளுக்கு
செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதேவேளை மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1500க்கும் மேற்பட்ட பொலிஸாரும் 87 பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன.

இம்முறை விசேட தேவையுடையவர்களுக்காக கண்பார்வை அற்றோர்களுக்காக சிறப்பு
வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு, கண்காணிப்பாளர்
களுடன் தேர்தல் கண்காணிப்பு ரோந்து பணிகளும் இடம்பெற உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version