Home இலங்கை சமூகம் நீதி அமைச்சரின் கருத்துக்கு அருட்தந்தை மா.சக்திவேல் கடும் கண்டனம்

நீதி அமைச்சரின் கருத்துக்கு அருட்தந்தை மா.சக்திவேல் கடும் கண்டனம்

0

அரசியல் கைதிளை விடுதலை
செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில்
இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார் ? என அருட்தந்தை மா.சக்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் கைதிகள் எவரும் இல்லை என நீதி அமைச்சர் தெரிவித்ததைமையை கண்டித்து
அருட்தந்தை மா.சக்திவேல் ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நிபந்தனை இன்றி விடுதலை 

“சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை
இன்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட
வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்ட கால அரசியல் கோரிக்கையாகும்.

தமிழர் தாயக மண்ணான வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் நின்று
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாம் பதவிக்கு வந்தால் அரசியல்
கைதிகளை விடுதலை செய்வோம் இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என
உறுதியளித்தார்.

அதன் ஈரம் காயும் முன்னே அவர் அரசாங்கத்தின் நீதி மற்றும்
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும்
இல்லை குறிப்பிட்டு உள்ளமை அவர்களின் அரசியல் அநாகரித்தை அம்பலப்படுத்தி
உள்ளதோடு வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை
அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை
செய்வோம் என்று கூறி பதவிக்கு வந்ததும் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில்
இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார் ?

மக்கள் விடுதலை முன்னணி

இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்
இருப்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே
குறிப்பிட்டிருந்தார்.

அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று
குறிப்பிடப்படவில்லை. இது அரசாங்கத்திற்குள் பிளவையே வெளிபடுத்துகின்றது?

தமிழர்களின் அரசியல் சார்ந்த விடயங்களில் எந்த ஒரு துளி நகர்வை யேனும் தேசிய
மக்கள் சக்தி மேற்கொள்ளப் போவதில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் பேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களின்
அரசியலை பயங்கரவாதத்திற்குள் முடக்கி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தண்டனை
பெற்றுக் கொடுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை மகிழ்விக்கவே முன் நிற்கின்றது
என்பது தெளிவாகின்றது” என்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version