Home முக்கியச் செய்திகள் தலைமுடிக்காக மாணவன் எடுத்த விபரீத முடிவு

தலைமுடிக்காக மாணவன் எடுத்த விபரீத முடிவு

0

தலைமுடியை ஒழுங்காக வெட்டி வருமாறு பாடசாலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள நிலையில் அதனை புறக்கணித்த மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம், கடந்த புதன்கிழமை  இடம்பெற்றுள்ளதாக வெல்லவாய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, உல்கந்த, மெதகலகமவைச் சேர்ந்த 15 வயதுடைய கவீஷ லக்மால் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காவல்துறை விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “குறித்த மாணவனை கிராமத்துப் பாடசாலையில் அவரது தாய் சேர்த்துள்ள நிலையில், தலைமுடியை ஒழுங்காக வெட்டி வருமாறு பாடசாலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவனுக்கு இந்த முடிவு பிடிக்காத போதிலும் பாடசாலை வழங்கிய உத்தரவை புறக்கணிக்க முடியாது என்று அவரது தாய், முடி வெட்டுவதற்காக ஒரு சிகை அலங்கார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், மாணவன் அதை வெறுத்துள்ளதுடன் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த மாணவனின் தந்தை விபத்தில் இறந்துவிட்டதால், தாய் அவரை கவனித்து வந்துள்ளார்.

மேலும், இளைஞனின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version