காலி, கரந்தெனிய அருகே பாடசாலையொன்றில் நாட்டு வெடிகுண்டு ஒன்று தவறுதலாக வெடித்த சம்பவத்தில் மாணவனொருவர் காயமடைந்துள்ளார்.
கரந்தெனிய அருகே கெகிரிகந்த ஆரம்ப பாடசாலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கெகிரிகந்த பாடசாலை மாணவன் ஒருவர் குறித்த நாட்டுவெடியை பாடசாலை மைதானத்தில் கண்டெடுத்துள்ளார்.
அதன் பின் ஏனைய மாணவர்களுடன் சேர்ந்து வகுப்பறைக்கு எடுத்துச் சென்று நிலத்தில் ஓங்கி அடித்த போது அது வெடித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்த வெடிப்பு சம்பவத்தில் மாணவனொருவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.