Home உலகம் கனடாவில் துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்

கனடாவில் துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்

0

கனடா (Canada) – ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரம் 12ல் கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுள்ளது.

இலக்கு வைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் ரவை

எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டின் போது தலையில் துப்பாக்கி ரவை உராய்ந்து சென்றதில் மாணவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/student-injured-in-shooting-in-scarborough-1726004254

NO COMMENTS

Exit mobile version