வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் தனியார் கல்வி நிலையயத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து சற்று முன்னர் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில்
உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை
வகுப்பு நடைபெற்றுள்ளது.
மாணவியின் செருப்பு
குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025
இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால்
பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.
இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி
பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக் கல்வி நிலைய வளாகத்தில்
இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா
காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர்
மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இணைந்து
40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை
மீட்டு எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர கலைப்பிரிவு
மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
