Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் எறிபந்து போட்டியில் ஆசிரியரால் புறக்கணிக்கப்பட்ட மாணவன்

முல்லைத்தீவில் எறிபந்து போட்டியில் ஆசிரியரால் புறக்கணிக்கப்பட்ட மாணவன்

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட
கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் எறிபந்தாட்ட போட்டியில் இணைத்துக்கொள்ளப்படாது அந்தப் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியரினால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் 13 கலைப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் சிரேஷ்ட
மாணவத்தலைவராக செயற்பட்டுவரும் மாணவன் ஒருவரே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து, இதற்கான விசாரணைகளை முன்னெடுத்து நீதியினை
பெற்றுத்தருமாறு, மாணவனின் பெற்றோர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரிடம் மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசியமட்ட போட்டியில் வெற்றி

இந்த மாணவன் 2023ஆம் அண்டு மாகாணமட்ட போட்டி, தேசியமட்ட எறிபந்தாட்ட
போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு
போட்டியில் குறித்த மாணவனை புறந்தள்ளிவிட்டு ஆசிரியர் ஒருவரின் தனிப்பட்ட
செல்வாக்கினை பயன்படுத்தி வேறு ஒரு மாணவனை அணியில் இணைத்துக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version