Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கு இலாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு வடக்கு ஆளுநர் நடவடிக்கை

விவசாயிகளுக்கு இலாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு வடக்கு ஆளுநர் நடவடிக்கை

0

விவசாய உற்பத்திகளை விற்பனை
செய்கின்ற பொழுது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு
உற்பத்திக்கேற்ப இலாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் (Nagalingam Vedanayagam) தெரிவித்துள்ளார்.

அத்துடன் விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (02) திருநெல்வேலி விவசாய கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே வடக்கு ஆளுநர் இதனைக்
குறிப்பிட்டார்.

மூன்று நாட்கள நடைபெறுவுள்ள கண்காட்சி 

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான
விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று ஆரம்பமான கண்காட்சி மூன்று நாட்கள் இடம்பெற உள்ளது.

இந்த நிலையில் குறித்த கண்காட்சியினை வடக்கு மாகாண ஆளுநர்
நாகலிங்கம் வேதநாயகன் ஆரம்பித்து வைத்தார்.

இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதானியங்கள், பயிர்
உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாய செயல்முறைகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள்,
விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு
பார்வையிட்டனர்.

NO COMMENTS

Exit mobile version