Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் சமர்ப்பிப்பு

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் சமர்ப்பிப்பு

0

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்திற்கு சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு 11 மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொது
தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர்
எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று(23.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

தபால் மூலமாக வாக்கு விநியோகம் 

இதன்போது
அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் பிரதானமான தபால் மூலமாக வாக்கு விநியோகம் புதன் கிழமையில் மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து இடம்பெற்றது.

மொத்தமாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் 14222 பேர் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

எனினும் 14003 பேருடைய தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டு அவர்களுக்கான தபால் மூலமாக வாக்குகள் புதன்கிழமை தபால்
நிலையத்திற்கு பாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டவுன் எதிர்வரும் இம்மாதம்
மாதம் 30 ஆம் திகதி பொலிஸ்நிலையம், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும்,
அதுபோல் எதிர்வரும் 11 மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளிலும், ஏனைய
அலுவலகங்களிலும், நான்காம் திகதி மேலதிகமாக பொலிஸ், மாவட்ட செயலகம், தேர்தல்
அலுவலகத்திலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

NO COMMENTS

Exit mobile version