Home இலங்கை அரசியல் மைத்திரி – ரணில் சந்திப்பு : பேச்சுவார்த்தையில் கிடைத்த வெற்றி

மைத்திரி – ரணில் சந்திப்பு : பேச்சுவார்த்தையில் கிடைத்த வெற்றி

0

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையை கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர்

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த போதிலும், பல கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு கூட உறுப்பினர்களின் பெயர்கள் வழங்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version