Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் திடீர் முற்றுகைக்குள்ளான உணவகங்கள்

தமிழர் பகுதியில் திடீர் முற்றுகைக்குள்ளான உணவகங்கள்

0

அம்பாறை(Ampara) – சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர்  பரிசீலனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட
உணவகங்களிலேயே இவ்வாறு திடீர் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், உணவகங்கள், வெதுப்பகங்கள்,
மரக்கறி, மீன் விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள் மற்றும் இனிப்பு கடைகள் என்பன
பரிசீலிக்கப்பட்டுள்ளன.

பரிசீலனை நடவடிக்கை

இதன்போது, பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சில
நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் காலங்களில் உணவு சுகாதாரம் மீதான கண்காணிப்பு தொடரும் என்றும் இறுக்கமான சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் என பொதுச் சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த  பரிசீலனை நடவடிக்கைகளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். சகிலா இஸ்ஸதீனின்
வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.   

NO COMMENTS

Exit mobile version