Home இலங்கை சமூகம் நாட்டில் பல மணிநேர திடீர் மின்தடை! உண்மை காரணம் வெளியானது..

நாட்டில் பல மணிநேர திடீர் மின்தடை! உண்மை காரணம் வெளியானது..

0

கடந்த பெப்வரி மாதம் 09ம்திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகள் காரணம் அல்லவென்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 09ம் திகதி நாடளாவிய ரீதியில் பல மணிநேர மின்தடை ஏற்பட்டது.

மின்தடை 

பாணந்துறை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றியொன்றில் குரங்கு ஒன்று பாய்ந்து ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக குறித்த மின்தடை ஏற்பட்டதாக அப்போது அரசாங்கத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

எனினும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது வௌியாகியுள்ளது.

அதன் பிரகாரம் அன்றைய தினம் மின்பாவனையாளர்களின் கேள்விக்கு மேலதிகமாக அதிக கொள்ளளவிலான சூர்யவலு மின்சக்தியானது தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தமே மின்தடைக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த அறிக்கையின் முழு வடிவம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version