Home சினிமா அஜித்தின் 65 – வது படத்தை இயக்கப்போவது இந்த வசூல் ஹிட் கொடுத்த இயக்குநரா?.. சம்பவம்...

அஜித்தின் 65 – வது படத்தை இயக்கப்போவது இந்த வசூல் ஹிட் கொடுத்த இயக்குநரா?.. சம்பவம் லோடிங்

0

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சூர்யா இல்லை, ரெட்ரோ பட கதையை முதலில் இவருக்கு தான் எழுதினேன்.. இயக்குநர் உடைத்த ரகசியம்

நடிப்பை ஒரு புறம் வைத்து, தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த பரிசுகளை வாங்கி குவிக்கும் அஜித்தின் 65 – ஆவது படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. 

இந்த இயக்குநரா?

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்து இணையத்தில் செய்திகள் தீயாக பரவி வருகிறது.

அந்த வகையில், கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலுடன் அஜித் குமார் இணைகிறார் என கூறப்பட்டது. அதை தொடர்ந்து, அட்லீ அஜித்திடம் மூன்று கதைகள் கூறியதாக சொல்லப்பட்டது.

அதன் பின், புஷ்பா பட இயக்குநர் சுகுமார் ஏகே 65-ஆவது படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில், அஜித் யாருடன் அடுத்து இணையப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  

NO COMMENTS

Exit mobile version