Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலையின் எதிரொலி : கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை

சீரற்ற காலநிலையின் எதிரொலி : கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை

0

நுவரெலியா(Nuwara Eliya) மத்திய சந்தையில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து
காணப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி
வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை
காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளது.

இதனால், நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் அதிகமான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து
வருகின்றனர்.

மரக்கறிகளின் விலை

அத்துடன் நுகர்வோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் மரக்கறிகள் இரண்டு மூன்று நாட்களின் பின் பழுதடைவதால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பழுதடையும் பெருமளவிலான மரக்கறிகளை தினமும் குப்பையில் போட
வேண்டியுள்ளதாக அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

மேலும், சீரற்ற
காலநிலை காரணமாக மரக்கறிகளின் விளைச்சலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக  மரக்கறிகளின் விலை மேலும் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக
நுவரெலியா மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version