Home இலங்கை அரசியல் இலங்கையில் நாடாளுமன்ற வரலாற்றில் அநுர தரப்பில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் நாடாளுமன்ற வரலாற்றில் அநுர தரப்பில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்

0

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக, விழிப்புலனற்றோரின் சார்பில் சுகத் வசந்த டி சில்வாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை வழங்கி, தேசிய மக்கள் சக்தி கட்சி புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. 

இந்த வாரம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 686,3186 வாக்குகளை பெற்று 61.56 சதவீதத்தில் வெற்றிபெற்றது.

தேசிய பட்டியல்

இதனை தொடர்ந்து, குறித்த கட்சி சார்பில், தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 18 நபர்களின் பெயர்கள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டன. 

குறித்த பட்டியலில், விழிப்புலனற்றோர் சார்பில் சுகத் வசந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version