நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனின் தோல்வி தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி என அமெரிக்க (புலம் பெயர்ந்த) தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தினை அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் தோல்வியடைந்தமை தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான தருணமாகும்.
சுமந்திரன் தமிழர்களின் நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறிவிட்டார்.
மாறாக, அவர் தனது செல்வம், அதிகாரம் மற்றும் அந்தஸ்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்தார், பெரும்பாலும் சிங்களக் கருத்தியல் மற்றும் சிங்கள தேசியவாதத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
வடக்கு மாகாண சபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவரும் அறிந்ததே.
தமிழ் மக்களின் இறையாண்மை
மேலும், தமிழினத்துக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த நமது வீரத் தியாகிகளின் தியாகங்களை அவர் சிதைத்தார்.
இந்த முடிவு 146,000 வீர ஆன்மாக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. அது அவனது கர்மாவின் பலன்.
சிங்கள நாடாளுமன்றம் , ஜெனிவா, நியூயார்க், வாஷிங்டன் ஆகியவற்றில் அவரது அறிக்கைகள் இப்போது எந்த மதிப்பையும் கொண்டிருக்கவில்லை.
தமிழ் மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான போராட்டத்தில் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.