Home இலங்கை அரசியல் செம்மணி குறித்து வாய் திறக்காத அரசு: கொந்தளித்த சுமந்திரன்

செம்மணி குறித்து வாய் திறக்காத அரசு: கொந்தளித்த சுமந்திரன்

0

செம்மணி புதைக்குழி குறித்து தேசிய மக்கள் சக்தியிடம் தற்போது வரை மௌனம் நிலவுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சமந்திரன் (M. A. Sumanthiran) குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயத்தை அவர் தனது உத்தியோகப்பபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் தீவிரமானமிக்கவை.

 உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தால் அதன் வெற்றி சிங்கள மக்களுக்கும் தெற்கு அரசியலுக்கு மட்டுமல்ல, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கிலும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது.

இந்தநிலையில், பதவியேற்று எட்டு மாதங்கள் ஆகியும், செம்மணி மீதான மௌனம் காதைக் கெடுக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version