முடிந்தால் மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(16) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில்
வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்றுவருகிறது.
நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம் மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தை
வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை.
இவர்களும் இலஞ்சத்துக்கு துணைபோனவர்களாகத் தான் பார்க்க முடியும்.
நாம் சவால் விடுகிறோம். முடிந்தால் மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தை உடன் வெளியிடுங்கள். இல்லையேல் தீங்களும் ஊழல்வாதிகள் தான்” என்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மேலதிக தகவல் – ராகேஷ்