Home இலங்கை அரசியல் தம்முடன் இணையாத தமிழ் கட்சிகளை உதிரி கட்சிகள் என விமர்சித்த சுமந்திரன்

தம்முடன் இணையாத தமிழ் கட்சிகளை உதிரி கட்சிகள் என விமர்சித்த சுமந்திரன்

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உதிரி கட்சிகளான தமிழ் கட்சிகளை புறக்கணித்து இலங்கை தமிழரசு கட்சியை வெற்றிபெறச் செய்யவேண்டுமென அந்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுகருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களுக்காக அனைத்து உதிரி தமிழ் கட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் செயற்பாட்டில் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி ஈடுபட்டது. எமது கட்சியின் தலைவர் கீழிறங்கி அந்த கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார். பலர் இப்படி கீழிறங்குவது சரியா என கேட்டனர். இவ்வாறு தம்மை கூட்டுச் சேர்க்குமாறு அந்த கட்சிகளே வந்து எம்மிடம் கெஞ்சியிருக்க வேண்டும்.

நாம் நாடாளுமன்றில் மூன்றாவது பெரிய கட்சி. இன்று ஒருவர், இருவரை வைத்துக்கொண்டு இவர்கள் கட்சியை நடத்துகின்றனர்.எனவே இவர்களை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் அநுர தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் எதனை செய்து சாதித்தது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளியில்… 

https://www.youtube.com/embed/vcG5UD7JLHw

NO COMMENTS

Exit mobile version