Home இலங்கை அரசியல் புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்…! கம்மன்பில அதிரடி தகவல்

புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்…! கம்மன்பில அதிரடி தகவல்

0

புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி எம்.ஏ. சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) வழங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும் என்றும் கிடைத்த தகவலைத் தான் வெளிப்படுத்துகின்றேன் என்றும் உதய கம்மன்பில (Udaya Gammanpila) குறிப்பிட்டுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு நேற்று (24.10.2024) வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வெளிவிவகார அமைச்சுப் பதவி

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது அரசுடன் இணையுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனக்குக் கிடைத்த தகவலைத் தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம்.

தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல்.

இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம்.

இரு நிபந்தனைகள் 

2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை.

அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன்.

இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம்.

உண்மையை நாட்டு மக்களுக்குக் கூறும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. சுமந்திரன் வெளிவிவகார அமைச்சராவது பிரச்சினை அல்ல, அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்தான் பிரச்சினை என்றார்.

NO COMMENTS

Exit mobile version