Home இலங்கை அரசியல் ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் ஒரு விலாங்குமீன் : யாழில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டு

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் ஒரு விலாங்குமீன் : யாழில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டு

0

ரணிலுக்காக(ranil wikremesinghe) பாடுபடும் சுமந்திரன்(m.a.sumanthiran) தமிழ் கைதிகளின் விடுதலைக்கு
முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள்
எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று
(27.08.2025) ஊடக சந்திப்பொன்றை நடத்திய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணிலை விடுவிக்க ஓடிச் சென்ற சுமந்திரன்

 ரணில் கைதை அடுத்து ஓடிச்சென்று அவரை விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன், தமிழ்
கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது
சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்கான விசுவாசத்தையும்
காட்டுகின்றது.

நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து நிழல்
ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே
நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர்.

ஒன்று சேர்ந்த ஊழல்வாதிகள்

தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக
போராடுகின்றனர்.

இது ஊழல்வாதிகளான தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது.

அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது.

 எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம்
செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்று மேலும் தெரிவித்தார்.

 

NO COMMENTS

Exit mobile version