Home இலங்கை அரசியல் யாழில் சங்கின் செயற்பாடுகளை பொறுத்தே வவுனியாவில் நாம் செயற்படுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

யாழில் சங்கின் செயற்பாடுகளை பொறுத்தே வவுனியாவில் நாம் செயற்படுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

0

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
செயற்படும் விதத்தைப் பொறுத்தே வவுனியா மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள
சபைகளில் எமது செயற்பாடுகளும் இருக்கும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வவுனியா மற்றும் வன்னி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களில்
ஆட்சி அமைப்பது தொடர்பில் இன்றையதினம்(09.06.2025) ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும்
கருத்து தெரிவித்த அவர்,

“யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு ஏற்கனவே
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி செயற்பட
வேண்டும்.

வாக்குறுதிகள் 

அவர்கள் அதற்கு மாறாக செய்யப்படுவார்களாக இருந்தால் வவுனியா மாநகர சபை மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் நாமும் வழங்கிய
வாக்குறுதிகளின் பிரகாரம் செயற்படுவோம் என எதிர்பார்க்கக் கூடாது.

இது தொடர்பில் தான் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கும் கருத்து வெளியிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version